ஜுரஹரேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published on : 13th January 2018 03:26 AM | அ+அ அ- |
செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி ஜுரகேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில், தீராத காய்ச்சல் (ஜுரம்) உள்ளவர்கள் இங்குள்ள சிவலிங்கத்துக்கு மிளகு ரசம் சாதம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்தால் தீராத காய்ச்சல் உடனே தீரும் என்பதும், இதேபோல், இங்கு 8 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் சுந்தரநாயகி அம்மனுக்கு 108 எண்ணிக்கைக் கொண்ட எலுமிச்சை பழம் மாலை அணிவித்து வணங்கினால் அஷ்ட பைரவர்களின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இக்கோயிலில், மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் பொடி, பழச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருள்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றன.