பள்ளி, அரசுக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

சீர்காழி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ச.மு.இ. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பள்ளி நிர்வாக அலுவலர் எம். தங்கவேலு தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து கரும்புகள், மஞ்சள், இஞ்சிக் கொத்துகள் கட்டி,  மண் அடுப்பில், புதுப்பானைகள் வைத்து, புத்தரிசியிட்டு வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி,  பள்ளி முதல்வர் தங்கத்துரை, துணை முதல்வர் மாதவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதேபோல், புத்தூரில் உள்ள பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கல்லூரி முதல்வர் முனைவர் சிந்தியாசெல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, புதிதாக அடுப்பு அமைத்து பொங்கல் சமைத்து கதிரவனுக்கு படையல் இட்டு அனைவரும் பொங்கல் சாப்பிட்டு விழாவை கொண்டாடினர். கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சாந்தி, சண்முகசுந்தரம், கார்த்திகேயன், சாந்தி உள்ளிட்ட அனைத்துத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல்,  வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியின்போது, தேவையில்லாத பொருள்களை எரிக்கக் கூடாது, புகையில்லாமல் பொங்கல் வைப்பது குறித்த வாசகம் அடங்கிய அட்டையை கையில் ஏந்தி சென்றனர்.
இந்த பேரணியில், அலுவலர்கள் நடராஜன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி,  தலைமையாசிரியர் சுமத்ரா, மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com