சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை

சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி கூறினார்.

சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி கூறினார்.
சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினிடம் நிழற்குடை கட்டடத்தை தரமாகவும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் கட்டடம் கட்டப்பட வேண்டும் எனவும், பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, நகராட்சி பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ராஜமாணிக்கம், நகர கழகச் செயலாளர் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்கத் தலைவர் அமுதா சுகுமாறன், இயக்குநர்கள் ரவி சண்முகம், கலைவாணன், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com