செம்பனார்கோயில் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் இரட்டைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (55). மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி குணசுந்தரி (50). மகள்கள் சரண்யா(22), சுகன்யா (20). எம்.பி.ஏ. பட்டதாரி.
கண்ணனின் மகள் சரண்யாவுக்கும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வரும் மயிலாடுதுறை வட்டம், மூவலூர், வடக்கு வீதியைச் சேர்ந்த சம்பத்தின் மகன் விக்னேஷ்வரனுக்கும் (29) கடந்த 6 மாதத்துக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் கரூரில் தனிக்குடித்தனம் இருந்து வந்த நிலையில், விக்னேஷ்வரன் - சரண்யா இருவரிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதால் சரண்யா ஆக்கூரில் தனது பெற்றோர்களுடன் இருந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை சரண்யாவை பார்ப்பதற்காக விக்னேஷ்வரன் ஆக்கூருக்கு வந்தார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட மன உளச்சலில் சனிக்கிழமை கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், மயிலாடுதுறை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கலிதீர்த்தான் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சடலங்களை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ்வரனிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com