தஞ்சை - நாகை இருவழிச் சாலை திட்டத்தை துரிதப்படுத்தக் கோரிக்கை

தஞ்சை - நாகை இருவழிச் சாலைத் திட்டத்தை துரிதப்படுத்தி சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை - நாகை இருவழிச் சாலைத் திட்டத்தை துரிதப்படுத்தி சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி, தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள், கார்கள், வேன்கள் நீடாமங்கலம் வழியாகச் சென்று வருகின்றன. அதேசமயம், பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரங்களில் ரயில் நிலையம் மூடும்போது நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி கடுமையாக ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 7 மணி நேரம் வரை இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.
இப்போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு கடந்த ஆட்சிக் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருச்சி முதல் தஞ்சை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேறியது. தொடர்ந்து, தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான சாலை அமைக்க போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் நான்கு வழிச்சாலை இருவழிச்சாலை திட்டமாக மாற்றி பணிகள் தொடங்கின. இப்பணி தற்போது மந்த நிலையில் உள்ளது. மேலும், சாலை அமையும் பகுதிகளில் ஆற்றுப்பாலங்கள் கட்டும்பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, அரசு இருவழிச் சாலைத் திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com