தனியார் மகளிர் விடுதிகளை ஜன. 25-க்குள் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

தனியாரால் நிர்வகிக்கப்படும் மகளிர் விடுதிகள், காப்பங்களை ஜன. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்

தனியாரால் நிர்வகிக்கப்படும் மகளிர் விடுதிகள், காப்பங்களை ஜன. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு மகளிர் விடுதி, காப்பக விதி 2014 மற்றும் 2015 -இன் கீழ் தனியாரால் நிர்வகிக்கப்படும் மகளிர் விடுதிகள், காப்பகங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
எனவே, நாகை மாவட்டத்தில் தனியார் மூலம் நிர்வகிக்கப்படும் மகளிர் விடுதிகள், காப்பகங்களை ஜன. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அறிவுறுத்தலை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com