பொதுமக்கள் - காவலர்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு

சீர்காழியில் பொதுமக்கள் - காவலர்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று, சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

சீர்காழியில் பொதுமக்கள் - காவலர்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று, சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வாலிபால், கபடி போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
போட்டியில் சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துக்கு உள்பட்ட காவல்நிலைய வீரர்கள் மற்றும் விவேகானந்தா பள்ளி அணியினர் பங்கேற்று விளையாடினர். வாலிபால் மற்றும் கபடி அணிகளுக்கு புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவலர்கள் லோகநாதன், சார்லஸ், விஜயகணேஷ், பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விளையாடினர்.
போட்டியை சீர்காழி டிஎஸ்பி சேகர் தொடங்கி வைத்தார்.
இந்த இரு போட்டிகளிலும் காவல்துறை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.
இதேபோல், காவலர் குடும்பங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
எலுமிச்சை கரண்டி, இசை நாற்காலி, பானை உடைத்தல், ஓட்டப் போட்டிகள், ஸ்லோ சைக்கிள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா டிஎஸ்பி சேகர் தலைமையில் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர்கள் சிங்காரவேலு, செல்வம், முருகேசன், விசித்திராமேரி, வேலுதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வி, கவிதா மற்றும் பலர்பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com