நாகையில் காமராஜர் பிறந்த நாள் விழா பரிசளிப்பு

காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, நாகை, வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, அப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சி.கே. கனகராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளையும், ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளையும் வழங்கிப் பேசினார். பின்னர்,  அனைத்து மாணவ, மாணவியருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எம்.எஸ். கலையரசன்,  நாகை நகரத் தலைவர் கே.கே. ரவிச்சந்திரன், நாகூர் நகரத் தலைவர் அப்துல்காதர், நிர்வாகிகள் எம். மருதவாணன், ராஜசேகர், ராமலிங்கம், ரவிக்குமார், ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com