கூட்டுறவு வங்கியில் ரூ. 4.58 லட்சம் கையாடல்: முன்னாள் செயலர், எழுத்தருக்கு 2 ஆண்டு சிறை

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் தயாரித்து  ரூ. 4.58 லட்சம் கையாடல் செய்ததாக  வங்கியின்

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் தயாரித்து  ரூ. 4.58 லட்சம் கையாடல் செய்ததாக  வங்கியின் முன்னாள் செயலர், எழுத்தருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீர்காழி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
காத்திருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 1995 முதல் 1998 -ஆம் ஆண்டு வரை அப்போது செயலராக பணியாற்றிய சீர்காழியைச் சேர்ந்த வைத்தியநாதன்,  விற்பனையாளர் மற்றும் எழுத்தராக பணிபுரிந்த காத்திருப்பைச் சேர்ந்த வீரபாண்டியன் ஆகிய இருவரும் பணிபுரிந்த காலத்தில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், நாகை மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் தாக்கல் செய்த வழக்கில் கோப்புகள் கிடைக்கப் பெற்று, கடந்த 2003 -ஆம் ஆண்டு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்தும், பொய் கணக்குகள் எழுதியும் ரூ. 4.58 லட்சம் கையாடல் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டதால், வைத்தியநாதன், வீரபாண்டியன் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் ஜி. யுவராஜ் தீர்ப்பு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com