சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற விரும்பும், மகளிர் குழு உறுப்பினர்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற விரும்பும், மகளிர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு வங்கிகளில் கடன் பெற்றுத் தருதல், கடனைத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளுக்கு ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 2 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். தொடர்புடைய வட்டாரத்தின் களப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும்,  18 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு மற்றும் செல்லிடப்பேசியில் குறுந்தகவல்கள் அனுப்பத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், தகவல்களைக் கொண்டு செலுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கிராம மக்களை ஒருங்கிணைக்கவும், அருகில் உள்ள வங்கிகளுக்குச் சென்று வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்புடைய ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 15 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 04365-253061 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com