மீன்வள கணினி மென்பொருள் வடிவமைப்புப் பயிற்சி

நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வள மேம்பாட்டுக்கான கணினி மென்பொருள் வடிவமைப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வள மேம்பாட்டுக்கான கணினி மென்பொருள் வடிவமைப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, மீன்பிடித் துறையின் முக்கியத்துவம், அதிகப்படியான மீன்பிடிப்பு, மீன்களின் வசிப்பிட அழிவு, உவர் மற்றும் நன்நீர் வளங்களின் மீதான அச்சுறுத்தல்கள், தீர்வுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
உதவி பேராசிரியர்கள் ம. சிவகுமார், முகமது தன்வீர், பொறியாளர் ரகுபதி ஆகியோர் மீன்வள மேம்பாட்டு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்பொருள்கள் தயாரிப்புக்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கான கணினி மென்பொருள் வடிவமைப்பு குறித்துப் பயிற்சி அளித்தனர்.
நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் முக்கியத்துவம், துறை சார்ந்த  இன்னல்கள், பொறியியல் தலையீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்தப் பயிற்சி பட்டறை நடைபெற்றது. முன்னதாக, பயிற்சி கையேடு வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com