காடுவெட்டி குரு மறைவு: சீர்காழி பகுதியில் கடைகள் அடைப்பு

காடுவெட்டி ஜெ.குரு மறைவையொட்டி சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்,கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.

காடுவெட்டி ஜெ.குரு மறைவையொட்டி சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்,கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
காடுவெட்டி குரு மறைவையொட்டி கடையடைப்பு செய்திட நகர வர்த்தக சங்கத்தினரிடம் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வலியுறுத்தியகன்பேரில் நகர வர்த்த சங்கம் சார்பில் கடையடைப்பு செய்ய வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சனிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் நகரில் உள்ள பழைய பேருந்துநிலையம், கடைவீதி, கொள்ளிடமுக்கூட்டு, பிடாரி வடக்கு வீதி, காமராஜர் வீதி பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
சீர்காழி புதிய பேருந்து நிலையம், தென்பாதி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நலச் சங்கத்திற்கு உள்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பூக்கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோயில், புத்தூர், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை : வன்னியர் சங்கத் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் காடுவெட்டி ஜெ. குருவின் மறைவையொட்டி, மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இதையொட்டி, நகரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மயிலாடுதுறையிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
குத்தாலம்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, நாகை மாவட்டம், குத்தாலம், ஸ்ரீகண்டபுரம், கோமல், மங்கநல்லூர், திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com