புத்தூர் அரசு கல்லூரியில் ஜூன் 1-இல் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 1-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 1-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டி. அறிவுடைநம்பி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பி.காம்., பி.ஏ ஆங்கிலம், பி.ஏ. தமிழ் ஆகிய 5 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 13-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மே 28-ஆம் தேதி விண்ணப்பம் விநியோகத்துக்கான கடைசி நாளாகும்.
வரும் ஜூன் 1-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான (விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ) பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 4-ஆம் தேதி பி.காம்., பட்டப் படிப்புக்கும், 5-ஆம் தேதி பி.எஸ்.சி. கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
12-ஆம் வகுப்பில் பகுதி 3-இல் நான்கு பாடங்களில் 500 முதல் 800 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தங்களது டி.சி., சாதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com