நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும், குட்டைகளும் இருந்தன. இதில், 350 குளங்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் உள்ளது. சில குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குளங்கள் நிலத்தடி நீரைப் பாதுகப்பதற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை இருந்ததற்கான சுவடே இல்லாமல் உள்ளது.
எனவே, கிராமங்கள்தோறும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளைப் பழைய முறையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com