வெள்ளம் பாதித்த பகுதிகளில்  மணிசங்கர் அய்யர் குறைகேட்பு

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் திங்கள்கிழமை நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். 

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் திங்கள்கிழமை நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். 
கொள்ளிடம் ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. 
இதேபோல், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம், பருத்தி, மல்லி, அரும்பு, கத்திரி, வெண்டை போன்ற தோட்டப் பயிர்களும் சேதமடைந்தன. இந்நிலையில், வெள்ளம் பாதித்த கிராமமக்களை மத்திய முன்னாள் அமைச்சர் மணி சங்கர்அய்யர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 
நாதல்படுகையில் விவசாயிகளை சந்தித்தபோது, இப்பகுதியில் 300 டீசல் என்ஜின்கள் மற்றம் பல மின்மோட்டார்கள் வெள்ள நீரில் முழ்கி பழுதடைந்துள்ளது. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென்றனர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். தவிர, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை, குடிசை வீடுகளை முற்றிலும் இழந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார். அவருடன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜகுமார், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com