அங்கன்வாடி புதிய கட்டடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்

வேதாரண்யம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் பொது விநியோகத் திட்ட கடைகளுக்கான

வேதாரண்யம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் பொது விநியோகத் திட்ட கடைகளுக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். 
கத்தரிப்புலம், பனையடிகுத்தகை மற்றும் கோவில்குத்தகை பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (2017-18) திட்டத்தின்கீழ் தலா ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம், கோடியக்காடு ஊராட்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் (2017-2018) நிதியிலிருந்து ரூ. 9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்காடி கட்டடம், வேதாரண்யம் நகராட்சி பயத்தவரன்காடு கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் (2017-2018) நிதியிலிருந்து ரூ. 8.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்காடி கட்டடம், வேதாரண்யம் நகராட்சி மாகாளிக்காடு கிராமத்தில், வேதாரண்யம் நகராட்சி மூலம் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம், வாய்மேடு ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் (2017-2018) நிதியிலிருந்து ரூ. 9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்காடி கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ். மணியன்  திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர் முருகனின்  குடும்பத்தினருக்கு இயற்கை இடர்பாடு நிவாரண திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
நிகழ்ச்சிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com