கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாகை மாவட்டம், திருவெண்காடு, சின்னப்பெருந்தோட்டம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருவெண்காடு, சின்னப்பெருந்தோட்டம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு ஊராட்சிக்குள்பட்ட சின்னப்பெருந்தோட்டம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் சிதலமைடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கிராமப் பொதுமக்கள் கோயிலில் திருப்பணி மேற்கொண்டனர். பணி முடிவடைந்த நிலையில், குடமுழுக்கு யாக சாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.
இதையொட்டி, விநாயகர் பூஜை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், முதல்கால யாக பூஜையும், மகா பூர்ணாஹுதியும், தீபாரதனையும் நடைபெற்றன. இராண்டாம் கால யாக பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பின்னர் மேள, தாளங்கள் முழங்க திருவெண்காடு கணபதி சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில், புனிதநீர் அடங்கிய யாக குடங்கள் கோயிலின் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜை செய்யபட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் பாரதி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய திமுக செயலாளர் சசிக்குமார், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com