மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கக்கோரி தர்னா

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அறிவித்தபடி உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக் கழக வளாகம் முன்பு நிலம் வழங்கியவர்கள் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அறிவித்தபடி உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக் கழக வளாகம் முன்பு நிலம் வழங்கியவர்கள் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் நாககுடியில் ரூ.1,000 கோடி மதிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக நிலங்களை மாநில அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் 570 ஏக்கருக்கு மேல் நாககுடி பகுதிகளில் கையகப்படுத்தியது.

அப்போது நிலம் வழங்கிய சிலர் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் வேலை மற்றும் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கினால் மட்டுமே நிலம் வழங்கப்படுமென தெரிவித்தாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததாகவும் நிலம் வழங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வழங்கவில்லை, கல்வி குறித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதுகுறித்து மத்திய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனுமில்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த நிலம் வழங்கியவர்கள் திடீரென்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தின் முன் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அரசு ஒப்புக்கொண்டபடி தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com