தட்டச்சு தேர்வில் புதிய பாட திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

தட்டச்சு தேர்வில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தட்டச்சு தேர்வில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 48-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தில் தட்டச்சு தேர்வில் முதலிடத்தில் வெற்றி பெறும் மாணவரின் முகவரி, புகைப்படம், அவர் சார்ந்த பள்ளியின் முழு முகவரி, மாணவர் பெற்ற மெரிட் சான்றிதழை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 2017 ஆகஸ்ட் பருவ தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை விரைவில் வெளியிட வேண்டும். தட்டச்சு தேர்வில் பங்கேற்பவர்கள் அதிகரித்து வருவதால் தட்டச்சு தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். சுருக்கெழுத்துத் தேர்வுகள் முறையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தட்டச்சுப் பாடத்திட்டங்களில் தற்போதுள்ள கணினிமயமாக்குதலுக்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் சங்கத்தால் அளிக்கப்பட்டதை உடனடியாக கவனித்து, சிறப்புக்குழு அமைத்து பரிந்துரைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தட்டச்சு ஆங்கிலம், தமிழ் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு சான்றிதழ் வழங்கும் கம்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுக்கு புதிய தேர்வு மையங்களாக ஊட்டி, நாகர்கோயிலை உடனடியாக அறிவிக்க வேண்டும். தட்டச்சு விடைத்தாள் திருத்தும் மையம் ராஜபாளையத்துக்கு பதிலாக திருநெல்வேலியில் அமைக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் வழங்கப்படும் வினாத்தாள்களின் அளவு சரியாக ஏ4 அளவுக்கு இருக்க ஆவன செய்ய வேண்டுமென்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. சங்க மாநிலச் செயலர் கே. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜே. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com