எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

திருவாரூரில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டு வரும் பந்தல் அமைக்கும் பணிகளை சனிக்கிழமை அமைச்சர் ஆர். காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூரில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டு வரும் பந்தல் அமைக்கும் பணிகளை சனிக்கிழமை அமைச்சர் ஆர். காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூரில் ஆக.19-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக விழா நடைபெறும் இடத்தில் மண் நிரப்பி சமன் செய்யும் பணி, சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பந்தல் அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தேவையான ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் போது செய்தியாளர்களிடம் அவர், விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 36,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 1 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது என்றார் அவர்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com