பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளைக் கூறலாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள நிறை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள நிறை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தில் தூய்மையான, வெளிப்படையான முறையை கொண்டு வரும் வகையில் நியாய விலைக் கடைகளின் பதிவேடுகளை (கணக்குகள்) சமூக தணிக்கைக்கு உட்படுத்த குடியரசு மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்துடன் இணைந்து நியாய விலைக் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்புடைய பொதுமக்கள் முன்னிலையில் ஆக..15-ஆ ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலை அங்காடிகளில் முன்னுரிமை, முன்னுரிமையல்லாத குடும்ப அட்டைதாரர்கள் பட்டியல் சமூக தணிக்கைக்கு பொதுமக்களின் முன்பு வைக்கப்படுகிறது.
எனவே குடும்ப அட்டைதாரர்கள், பொதுமக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com