விளையாட்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்: டிஎஸ்பி பேச்சு

கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டுமென திருத்துறைப்பூண்டி காவல்துணைக்கண்காணிப்பாளர் எம். ஜெபராஜ் பேசினார்.

கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டுமென திருத்துறைப்பூண்டி காவல்துணைக்கண்காணிப்பாளர் எம். ஜெபராஜ் பேசினார்.
திருத்துறைப்பூண்டி தூயஅந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர் மேலும் பேசியது: இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் விளையாட்டுத் துறைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டை பாடமாக நடத்தி விளையாட்டுத் துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கினர். ஆனால் அந்த நடைமுறை சிலகாலமாக மாறி படிப்பு, மனப்பாடம் செய்தல், கூடுதல் மதிப்பெண் பெறச் செய்தல் என சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஒலிம்பிக் போன்ற உலக அளவிலான போட்டி பந்தயங்களில் பதக்கப் பட்டியலில் நமது நாடு பின்தங்கிய நிலையில் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.
எனவே, பள்ளிகளில் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுத்துறைக்கும் அளித்து மாணவர்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து பட்டைதீட்டிய வைரங்களாக மிளிரச் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்ற நீதிபதி வி.அச்சுதன் தலைமை வகித்து, மாணவர்கள் கொண்டு வந்த ஒலிம்பிக் சுடரை பெற்றுக்கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளி தாளாளர் பி.வின்சென்ட் ஆரோக்கியராஜ் வரவேற்றார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்குரைஞர் வி .அரசு முன்னிலை வகித்தார். வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் மாணவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.
துணை முதல்வர் ஹெலன் இமாக்குலேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com