எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

திருவாரூரில் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பொது மக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூரில் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பொது மக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மறைந்த முன்னாள் முதல்வரும், நூற்றாண்டு விழா காணும் எம்ஜிஆரின் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது.
அவருடைய வழியை பின்பற்றி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலதிட்டங்களை அறிவித்து எம்ஜிஆரின் புகழுக்கு பெருமை சேர்த்தார்.
எம்ஜிஆரின் நினைவை போற்றும் வகையில் அவர் ஆற்றிய பணிகள், அவர் குறித்த வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வரு ங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு அனைத்து மாவட்டங் களிலும் நடத்தி வருகிறது.
விழாவில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் அவர் ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங் கள் மற்றும் திட்டங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்திடும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை விழாவில் மக்கள் பார்க்கும் வகையில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகிறது. தவிர எம்ஜிஆரின் குறும்படம், அவர் நடித்த திரைப்படங்கள் கிராமங்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
திருவாரூர் - தஞ்சாவூர் சாலை வன்மீகபுரம் அம்மா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, ரூ. 37.74 கோடி மதிப்பில் பல்வேறு துறைகள் சார்பில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்  நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜாவைத்தியநாதன், மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
விழா நாளில் மதியம் 3 மணி  அளவில் எம்ஜிஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com