ஜாக்டோ ஜியோ அடையாள வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்

நீடாமங்கலத்தில் ஜாக்டோ ஜியோ அடையாள வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் ஜாக்டோ ஜியோ அடையாள வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெ.மணிவண்ணன் தலைமை வகித்தார்.
உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ரா.தமிழரசன், எஸ்.தமிழ்ச்செல்வன், குரு.செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடரவேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு  எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். எட்டாவது ஊதிய மாற்றம் ஏற்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  ரா.பழனிச்செல்வி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com