கூத்தாநல்லூரில் மீலாது விழா மாநாடு

கூத்தாநல்லூரில் மீலாது விழாவையொட்டி, இறைப்புகழ்ச்சி சொற்பொழிவு நடைபெறுகிறது.

கூத்தாநல்லூரில் மீலாது விழாவையொட்டி, இறைப்புகழ்ச்சி சொற்பொழிவு நடைபெறுகிறது.
கூத்தாநல்லூரில் ஜஷ்ன மீலாத்  சொசைட்டி சார்பில் 68 -ஆம்  ஆண்டு மீலாத் விழா ஸீரத்  மாநாடு  நடைபெற்று வருகிறது.   கடந்த  20-ஆம் தேதி  இரவு  தொடங்கிய விழாவில், 9-ஆவது நாளாக புதன்கிழமை  இரவு,  கூத்தாநல்லூர்  பெரியதெருவில்  அமைக்கப்பட்டுள்ள அல் அமீன்  பந்தலில், கூத்தாநல்லூர் பெரியப்  பள்ளிவாசல் இமாம்  ஏ.எல்.முகம்மது அலி,  நபிகள்  நாயகத்தின் வரலாற்றை  விளக்கிக்க கூறினார்.  
விழாவுக்கான ஏற்பாடுகளை ஜஷ்ன மீலாத்  சொசைட்டி த லைவர் கே.எம். ரஹமத்துல்லா,  செயலாளர் பி.எஸ். அன்வர்தீன்,  துணைச் செயலாளர்கள் ஏ.ஏ. ஜக்கிரியா,  கே. எம். நூருல்ஹைஸ், துணைத்  தலைவர்கள்  எஸ்.ஈ.ஏ. முகம்மது  மைதீன், பி.கே.எம். முகம்மது மாலிக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
விழா குறித்து, ஜஷ்ன மீலாத் சொசைட்டி  தலைவர்  கே.எம். ரஹமத்துல்லா கூறியது: மீலாது நபி தினமான சனிக்கிழமை (டிச.2) காலை மாநாட்டில் நடைபெறும் முதல்  நிகழ்ச்சிக்கு,  நீடூர்  ஜாமியா  மிஸ்பாஹீல்  ஹீதா  அரபிக் கல்லூரி முதல்வர்  ஏ. முகம்மது  இஸ்மாயில் தலைமை வகிக்கிறார். 
இம்மாநாட்டில், திருவிதாங்கோடு, அல் ஜாமிஉல்  அன்வர் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம். நிஜாமுதீன், "மறுமையின் வெற்றிக்கு மத்ஹபுகள்' என்ற  தலைப்பிலும், சென்னை கோடம்பாக்கம், புலியூர் ஜீம்ஆ  மஸ்ஜித்  தலைமை  இமாம் எஸ்.எம்.எஸ். முஹம்மது உமர்  ரிழ்வானுல்லாஹ், "பெருமானாரின் வருகை உலகில் ஏற்படுத்திய  தாக்கம்' என்ற  தலைப்பிலும்,  காயல்பட்டினம் அரபிக் கல்லூரி பேராசிரியர்  ஏ.கே. முஹம்மது அஸ்பர், "அறிவுச் சுரங்கம் அருள் மறை குர்ஆன்' என்ற  தலைப்பிலும், கூத்தாநல்லூர் ஜாமியா மன்ப உல் உலா அரபிக் கல்லூரி பேராசிரியர்  எஸ்.கே.எம். ஜெகபர்தீன்,  "மீலாது  விழா தரும்  படிப்பினைகள்'  என்ற  தலைப்பிலும்  உ ரையாற்றுகிறார்கள் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com