அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருவாரூரில்   அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  அண்மையில் நடைபெற்றது.

திருவாரூரில்   அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  அண்மையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் 2017-18- ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை உள்ளடக்கிய கல்வித் திட்டக் கூறுகள்,  மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அவர்கள் உரிமைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஜூலை 14-ஆம் தேதி 10 ஒன்றியங்களில் நடைபெற்றது.
கூட்டம் மற்றும் விழிப்புணர்வு பேரணி மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்தல் முக்கிய நோக்கமாகும்.
கூட்டத்தில் 10 ஒன்றியங்களில் நடைபெற்ற கூட்டத்தில் 163 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 10 ஒன்றிய உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், 10 வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 700 பேர் பங்கேற்றனர்.  திருவாரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்    க. கலைவாணன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com