கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

திருவாரூரில்   கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூரில்   கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்டப் பணியிடைப் பயிற்சி திங்கள்கிழமை திருவாரூர், மன்னார்குடியில் தொடங்கியது.
இரு பயிற்சி மையங்களில் 384 கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும் வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள கணித ஆசிரியர்களுக்கு திருவாரூர் நியூபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,  மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள கணித ஆசிரியர்களுக்கு மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்  பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருவாரூரில்  அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்ட  உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன் தொடங்கி வைத்தார். இதில் நியூபாரத் பள்ளி தாளாளர் முரளி, அனைவருக்கும் கல்வி இயக்கக உதவித் திட்ட அலுவலர் சங்கரநாராயணன், மைய ஒருங்கிணைப்பாளர்கள் மூவாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீனாட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே. தனபால் , கருத்தாளர்கள் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோ. கெளதமன், வீரசேகா, சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பாண்டியன், அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி ஜூலை 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com