காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

மன்னார்குடி அடுத்த மேலவாசல் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி,  காலி குடங்களுடன் பெண்கள்

மன்னார்குடி அடுத்த மேலவாசல் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி,  காலி குடங்களுடன் பெண்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
மேலவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குத்தெரு, தாஸ்கண்ட்தெரு, ஆற்றங்கரைதெரு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு, வடக்குதெரு, தனியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒன்றன்பின் ஒன்றாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றும் மின்மோட்டார்கள்  பழுதடைந்ததை அடுத்து, கடந்த 15 நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில், சென்ற மூன்று நாள்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாம். அதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்திடம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்  தகவல் அளித்தும் ,அதிகாரிகள் யாரும் வராததுடன் குடிநீர் பிரச்னைக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லையாம்.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள், பெண்கள் கிராம நிர்வாகி யு.சரபோஜி தலைமையில்   திரண்டு வந்து, மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து  காலி குடங்களுடன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.   முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன்   ஊராட்சி ஒன்றிய ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து  முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com