சோழப்பாண்டியில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியை  அடுத்த  சோழப்பாண்டியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி,அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மன்னார்குடியை  அடுத்த  சோழப்பாண்டியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி,அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலையாமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட சோழப்பாண்டி கிராமத்தில் நடுத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம்  நடுத்தெரு, தெற்குதெரு, மேலக்காடு, கருக்காடு, சந்தைகடை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாத நிலையில், ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்தி, தடையில்லாத குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ஜூலை 14-ம் தேதியிலிருந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து முற்றிலுமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாம். ஊராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடும் செய்யவில்லையாம்.
 அதனையடுத்து சோழப்பாண்டியை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் திரண்டு வந்து திங்கள்கிழமை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ஞா.கமலராஜை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்து வலியுறுத்தினர். அவர்களிடம் உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கிராம மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com