ஆங்கிலப் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி தொடக்கம்

திருவாரூரில் ஆங்கிலப் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூரில் ஆங்கிலப் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 10 நாள்கள் பயிற்சி அளிக்க, முதல் கட்டமாக மண்டல அளவில் ஆங்கிலப்பாட கருத்தாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. திருவாரூரில் இப்பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. ஜூன் 23-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இப்பயிற்சி நடைபெறுகிறது.
இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆசிரியர்கள், 14 முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் 18 ஆசிரிய பயிற்றுநர்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன், மாவட்டக் கல்வி அலுவலர் பா. சோழன், சென்னை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட நிர்வாக அலுவலர் கு. முத்துசாமி, குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோ. கெளதமன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com