திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயிலில் ஜூலை 27-இல் ராகு, கேது பெயர்ச்சி

திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி ஜூலை 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி ஜூலை 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயில் உள்ளது. ஜூலை 27-ஆம் தேதி மதியம் 12.48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடப்பெயர்ச்சியாவதையொட்டி இக்கோயிலில் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். பக்தர்கள் ரூ. 50 செலுத்தி ஜூலை 27-இல் பரிகார பால் அபிஷேகம், ரூ.100 செலுத்தி ஜூலை 28-இல் பரிகார லட்சர்ச்சனை செய்து கொள்ளலாம். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com