திருவாரூரில் நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவாரூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது என அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்

திருவாரூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது என அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ) ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் வட்டார வள மையம் சார்பில், திருவாரூர் ஆர்சி பாத்திமா பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது.
முகாமில், மனநல மருத்துவர், காது, மூக்குத் தொண்டை நிபுணர், கண் மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் போன்ற பல்வேறு துறை மருத்துவர்கள் பங்கேற்று மதிப்பீடு செய்து, மாற்றுத்திறன் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குகின்றனர். தவிர, தேவையான குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மற்றும் அடையாள அட்டை, மருத்துவ ஆலோசனகள் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com