ரமலான் சிறப்பு கூட்டுத் தொழுகை

திருவாரூர் மாவட்டத்தில் ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ரமலான் பண்டிகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணிக்கு திருவாரூர், கொடிக்கால்பாளையம், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரை ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மன்னார்குடியில்...
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை மன்னார்குடியில் ஐந்து பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமியர்கள் இணைந்து சிறப்பு கூட்டுத் தொழுகையை நடத்தினர். பெரியக்கடைதெருவில் உள்ள 2 பள்ளிவாசல், கீழராஜவீதி, கால்வாய்கரை, அசேசம் ஆகிய ஐந்து பள்ளிவாசலை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து பெரியகடைதெரு பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகையை திங்கள்கிழமை காலையில் நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம், நீடாமங்கலம் கடைத்தெரு, பழைய நீடாமங்கலம், கோயில்வெண்ணி, ஆலங்குடி, வலங்கைமான், ஆவூர் கோவிந்தகுடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
எளியோருக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. பிற மதத்தினரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அடியக்கமங்கலத்தில்...
திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை, 1,2 சார்பில், அடியக்கமங்கலத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ராஜா தெருவில் மாவட்ட பொருளாளர் பாஸித், ரயிலடி தெருவில் அமைப்பாளர் ஹாரீஸ் ஆகியோர் தொழுகை நடத்தி பேசினர். தொழுகையில் 2,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முத்துப்பேட்டையில்...
திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தெளகித் ஜமாத் சார்பில் தெற்குத் தெரு பள்ளிவாசல் திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கிளைத் தலைவர்முகம்மதுமீரா லெப்பை தொழுகையை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
மற்றும் புதுத்தெரு, நடுமில் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com