பிறவியிலேயே காணப்படும் தோல் வியாதிகளை சரி செய்யலாம்: மருத்துவக் கல்லூரி முதல்வர்

பிறவியிலேயே காணப்படும் தோல் வியாதிகளை சரி செய்யலாம் என்றார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.

பிறவியிலேயே காணப்படும் தோல் வியாதிகளை சரி செய்யலாம் என்றார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தோல்நோய் சிகிச்சைப் பிரிவில் லேசர் (கதிர்வீச்சு) சிகிச்சை செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
அனைத்து துறைகளையும் நவீன சிகிச்சை வசதிகளோடு மேம்படுத்தி வரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சைப் பிரிவில் லேசர் சிகிச்சை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தோலின் ஏழு அடுக்குகளில் முதல் இரண்டு அடுக்குகளாக எபிடொமிஸ், டொமிஸ் ஆகியவை காணப்படுகின்றன.
தோல் நிôற்றத்திற்கு காரணமான இந்த அடுக்களில் காணப்படும் நோய்களை சரிசெய்ய லேசர் கருவி உதவுகிறது.
லேசர் கதிர்கள் தோலில் உள்ள "மெலனின்' என்ற நிறமியை மட்டுமே ஊடுருவி நிôற்றத்தை உண்டாக்கும். தோலின் மற்ற பகுதிகளுக்கு இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
யாக் லேசர் எனப்படும் இக்கருவி மூலம் பிறவியிலேயே காணப்படும் தோலில் நிறமாற்ற வியாதிகளையும் சரிசெய்ய முடியும். மேலும் முகத்தில் காணப்படும் மங்கு, தேவையில்லாத மச்சம், படர்மச்சம், பச்சை குத்தியிருத்தல் முதலியவற்றையும் அகற்றலாம். ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள இக்கருவியின் மூலம் தோல் நோயாளிகள் பயனடைவார்கள் என்றார்.
நிகழ்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் க. மயில்வாகனன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில், துணை முதல்வர் மருத்துவர் வெற்றிவீரன், துணைக்கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தோல்நோய் சிகிச்சைத்துறைத் தலைவர் பாலாஜி தலைமையில் மருத்துவர் ரவீந்திரபாபு, ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக மருத்துவமனையில் நடைபெற்று வரும் மாவட்ட குழந்தைகள் பிறவிக்குறைபாடு கண்டறியும் மையக் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com