நாகை, திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 335  பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகை, திருவாரூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 335 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகை, திருவாரூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 335 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும்.  பணிக்கொடையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். உணவு செலவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகையில்...
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற சாலை  மறியலுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என். புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சொ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.
இந்த மறியலில் பங்கேற்ற 100 பெண்கள் உள்பட 140 பேரை நாகூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
திருவாரூரில்...
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியலுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மறியலில் பங்கேற்ற 145 பெண்கள் உள்பட 195 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com