மறைந்த சி.ஆர்.பி.எப். வீரருக்கு நினைவு கல்வெட்டு தூண் அமைக்கும் நண்பர்கள்

சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களில் ஒருவரான நீடாமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு நினைவு கல்வெட்டு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களில் ஒருவரான நீடாமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு நினைவு கல்வெட்டு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள கலாபந்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணியின்போது அங்கு சாலை அமைத்து வந்த பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் 90-க்கும் மேற்பட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ஸல் தீவிரவாதிகள் ஏராளமானோர் அவர்களை சுற்றி வளைத்து சுட்டினர். இதில் 25 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இவர்களில் நீடாமங்கலம், காமராஜர் காலனி 2-ஆவது தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரும் (38) ஒருவர். அவரது சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு 21 முறை குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது வீடு அமைந்துள்ள காமராஜர் காலனியில், அவரது நண்பர்கள், தெருவாசிகள் அனைவரும் இணைந்து நினைவு கல்வெட்டு தூண் ஒன்றை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்ததும், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் வகையிலான விழா எடுக்கப்பட்டு நினைவுத் தூண் திறக்கப்படும் என இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com