கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா, ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே. சுப்பிரமணியன், நார்த்தாங்குடியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஜெ. நடாராஜன், ஆவூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் டி. சுப்பிரணியன் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போரட்டம் நடைபெற்றது.
ஆவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கந்தசாமி, ஆலங்குடியில் முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, நார்த்தாங்குடியில் மாவட்டக் குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், வலங்கைமானில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் அனைத்து போராட்ட மையங்களுக்கும் சென்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அத்தியாவசியப் பொருள்கள், குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டங்களில் பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com