எஸ்எஸ்எல்சி தேர்வு: 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் பள்ளி
பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது.
இப்பள்ளியில் கணிதப் பாடத்தில் 13 பேரும், அறிவியலில் 5 பேரும், சமூக அறிவியலில் 15 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
490 மதிப்பெண்ணுக்கு மேல் 10 பேரும், 480-க்கு மேல் 34 பேரும், 470-க்கு மேல் 54 பேரும், 450-க்கு மேல் 85 பேரும், 400-க்கும் மேல் 121 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ஜி. வெற்றிச்செல்வம், பள்ளி இயக்குநர் ஏ. சுகுமார் ஆகியோர் பாராட்டினர்.
மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி
மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 97  மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கணிதம், அறிவியலில் தலா 8 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி தாளாளர்கள் ஆர். செந்தில்குமார், எஸ். சண்முகராஜா, முதல்வர்கள் ஏ. அருள்ராஜா, கே. சாந்தி, கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் இ.வி.பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.
தரணி மெட்ரிக் பள்ளி
மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியர் 112 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதில் கணிதம், அறிவியலில் தலா 6 பேரும், சமூக அறிவியலில் 7 பேரும் நூற்றுக்கு நாறு மதிப்பெண்கள் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி நிறுவனர் எஸ். காமராஜ், தாளாளர் கே. விஜயலெட்சுமி, நிர்வாகி எம். இளையராஜா, முதல்வர் எஸ். சேதுராமன் ஆகியோர் பாராட்டினர்.
பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி
மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவியர் 167 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதில் கணிதத்தில் 11 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி தாளாளர் கி. அன்பழகன், முதல்வர் ஜெ. அசோகன் ஆகியோர் பாராட்டினர்.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 104 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவ, மாணவியரையும், பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பள்ளி நிறுவனர் உ.நீலன், தாளாளர் நீலன்.அசோகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டாக்டர் ஜி.கார்த்திகேயன், முதன்மை முதல்வர் புவனேஸ்வரி, முதல்வர் தேவகி ஆகியோர் பாராட்டினர்.
செயின்ட் ஜூட்ஸ் பள்ளி
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில், நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 43 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். 500-க்கு 480 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேர்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 2 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளையும்  பள்ளி தாளாளர் எஸ். நடராஜன், செயலாளர் என். அநிரூபிதா, நிர்வாக இயக்குநர் எம். விக்னேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். கோவிந்தராஜன், துணைத் தலைவர் வ.ராஜகோபால் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com