எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட்டம் 91.97 சதவீதம் தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட்டம் 91.97 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருவாரூர் மாவட்டம் 91.97 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
மாவட்டத்தில், 2016-17-ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 8,354 மாணவர்களும், 8,797 மாணவியரும் பங்கேற்றனர். தேர்வு எழுதிய 17,151 பேரில், மாணவர்கள் 7,428 பேரும், மாணவியர் 8,346 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 15,774. இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.92, மாணவியரின் தேர்ச்சி விகிதம் 94.87. மொத்த தேர்ச்சி விகிதம் 91.97.
நிகழாண்டில் முன்னேற்றம்
கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 89.33-ஆக இருந்தது. நிகழாண்டில் 2.64 சதவீதம் கூடுதல் தேர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 208 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 130 அரசுப் பள்ளிகளும், 78 தனியார் பள்ளிகளும் அடங்கும். 2016-17 பொதுத் தேர்வில் இப்பள்ளிகளில் 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இவற்றில் 19 அரசுப் பள்ளிகள் ஆகும். கடந்த ஆண்டு 28-ஆவது இடத்தில் இருந்த மாவட்டம் ஒரு இடம் முன்னேறி 27-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
632 பேர் 100-க்கு 100
மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பாடவாரியாக 632 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தமிழ், ஆங்கிலம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதிகளவில் சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் 497 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 12 அரசுப் பள்ளி மாணவர்கள், 146 தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 158 பேர் கணிதத்திலும், 43 அரசுப் பள்ளி மாணவர்கள், 134 தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 177 பேர் அறிவியலிலும், 153 அரசுப் பள்ளி மாணவர்கள், 344 தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 497 பேர் சமூக அறிவியலிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com