எஸ்எஸ்எல்சி: மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
2016-17-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம் உள்ளது. 57 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அவற்றின் விவரம்:
அரசுப் பள்ளிகள்... எடகீழையூர், கடுவங்குடி, கீழப்பெருமழை, கொல்லாபுரம், முத்துப்பேட்டை-மாங்குடி, திருவாரூர்-மாங்குடி, மருதவனம், மூவாநல்லூர், பாலையூர், பழவநத்தம், பூவனூர், செங்கங்காடு, தெற்குநாணலூர், திருவீழிமிழலை, தொண்டியக்காடு, துளசேந்திரபுரம் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளும், எடமேலையூர், இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளியும் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றன.
அரசு உதவிபெறும் பள்ளிகளான செயிண்ட் ஆண்டனி உயர்நிலைப் பள்ளி ஆதிச்சபுரம், செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடி, செயின்மேரி உயர்நிலைப் பள்ளி மேலாலவந்தசேரி ஆகியனவும் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.
மெட்ரிக் பள்ளிகள்... பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இந்தியா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி கூத்தாநல்லூர், லார்டு செவன்கில்ஸ் மேல்நிலைப்பள்ளி மேலவாசல், மிலினியம் மெட்ரிக் பள்ளி நாச்சிக்குளம், மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளி ஆதங்குடி, நவபாரத் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிக்கோட்டை, நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீடாமங்கலம், நியூபாரத் மெட்ரிக்பள்ளி திருவாரூர், ஓஎம்ஏ மெட்ரிக்பள்ளி திருத்துறைப்பூண்டி, ஓஎம்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாழச்சேரி ஆகியன 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி திருவாரூர், ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முத்துப்பேட்டை, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருவாரூர், சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருத்துறைப்பூண்டி, எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மன்னார்குடி, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முத்துப்பேட்டை, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மன்னார்குடி, ஸ்ரீமகாதேவ் குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வலங்கைமான், ஓம்சக்தி ஜானகிராம் மெட்ரிக் பள்ளி திருத்துறைப்பூண்டி, ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-1 மற்றும் 2 மன்னார்குடி, லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பூந்தோட்டம். செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மூலங்குடி, செயின் ஜூட்ஸ் பள்ளி நீடாமங்கலம், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி கொட்டையூர், சுபாஷ்சந்திரபோஸ் மெட்ரிக்பள்ளி மன்னார்குடி, தி மெரிட் மேல்நிலைப் பள்ளி சேந்தமங்கலம், யுனைட்டெட் மெட்ரிக் பள்ளி கொரடாச்சேரி, வின்னர்ஸ் மெட்ரிக் பள்ளி ஆலங்குடி, யூத்வெல்பர் மெட்ரிக் பள்ளி கோவிந்தகுடி, ஓஎன்ஆதுல் ராகிம் மெமோரியல் மெட்ரிக் பள்ளி பொதக்குடி, அசோகா சிசுவிகார் மெட்ரிக் பள்ளி மன்னார்குடி, பிர்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முத்துப்பேட்டை, தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மன்னார்குடி ஆகியனவும் 100 சதவீதம் தேர்ச்சிப்
பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com