கோயில் கட்ட பள்ளம் தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுப்பு

திருத்துறைப்பூண்டி அருகே  கோயில் கட்ட வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டியபோது, பழங்காலத்தைச் சேர்ந்த  7 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி அருகே  கோயில் கட்ட வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டியபோது, பழங்காலத்தைச் சேர்ந்த  7 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தண்டலைச்சேரி கிராமத்தில் நீள்நெறிநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அரிவட்டநாயனார் சிலை வைத்து, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரிவட்ட நாயனாருக்கு கண்ணந்தங்குடியில் கோயில் கட்ட முடிவு செய்த கிராம மக்கள், இதற்காக கடைக்கால் பள்ளம் தோண்டியபோது, ஸ்ரீநடராஜர், சிவகாமி, விநாயகர், ஸ்ரீசோமஸ்கந்தர், தேவகன்னிகைகள், அசரத்தேவர் மற்றும் பீடம் உள்ளிட்ட 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து பணி ஓய்வுபெற்ற செயல் அலுவலர் தை. ஜெயபால் வருவாய்த் துறையினருக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியர் கோ. உதயகுமார், பிறவி மருந்தீசர் கோயில் செயல் அலுவலர் மு.பாஸ்கரன், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் 7 சிலைகளையும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர். இந்த சிலைகளுக்கு அதே இடத்தில் கோயில் கட்டி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, கோயில் விழாக் காலங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்வதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com