முன்னேற்பாடின்றி சாலை சீரமைப்பு: பொதுமக்கள் மறியல்

திருத்துறைப்பூண்டியில் முன்னேற்பாடின்றி மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைக்கும் பணியால் பொதுமக்கள்

திருத்துறைப்பூண்டியில் முன்னேற்பாடின்றி மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலத்தம்பாடி கடைவீதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முறையாக மேற்கொள்ளாததால், ஜல்லித் துகள்கள் காற்றில் பறந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தேமுதிக ஒன்றிய அமைப்பாளர் வழக்குரைஞர் சுரேந்தர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆலத்தம்பாடி கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சரவணன், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய முறையில் சாலை செப்பனிடும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து,சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் திருவாருர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com