வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநாடு

திருவாரூரில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க பொன்விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க பொன்விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் தியாகராஜன் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். சங்க மாநில பொதுச் செயலர் முத்துகுமார் மாநாட்டின் நோக்கம் குறித்தும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் மானுடவியல் என்ற தலைப்பிலும் பேசினர். ஓய்வுபெற்ற மாநில நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், தலைமை செயலக சங்க செயலர் வெங்கடேசன், வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாநில செயலர் அய்யம்பெருமாள், அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் வேளாண்மைத் துறை, அதைச் சார்ந்த அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறைக்கு இணை இயக்குநர் (நிர்வாகம்) என்ற புதிய பணியிடம் ஒப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வரவேற்புக் குழுத் தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com