அனுமதி பெறாத மனைகளில் குடிநீர் இணைப்பை ரத்து செய்ய நடவடிக்கை: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத மனைப்பிரிவுகளுக்கு குடிநீர் வசதியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத மனைப்பிரிவுகளுக்கு குடிநீர் வசதியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் பொருட்டும், கிரையம் பெற்றவர்களும் மற்றும் மனைப் பிரிவு உரிமையாளர்களும் பயன்பெறும் வகையிலும் தமிழக அரசால் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் மே 4-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20.10.2016 அன்றோ அதற்கு முன்னரோ கிரையம் பெற்ற மனைகளுக்கு இந்த அரசாணை பொருந்தும். அவ்வாறு அனுமதியற்ற மனைகளை, மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ப்படாத பட்சத்தில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு ஆகியவற்றை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மேற்கண்ட மனைகளை விற்கவோ, வாங்கவோ பதிவுத் துறை மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய இயலாது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த உடனடியாக நகராட்சி ஆணையர் அல்லது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அல்லது பேரூராட்சி செயல் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com