காவலர் பணி எழுத்துத் தேர்வு: 8,639 பேர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 8,639 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 8,639 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகியப் பகுதிகளில் 8 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில், 8,639 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். சிலைத் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் 800 காவலர்கள் மாநிலம் முழுவதும் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் வேலுடையார் பள்ளி மையத்தில் 1,000 பேர் தேர்வெழுதினர். தேர்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டார். பெண்களுக்கென தனித் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com