பாதுகாப்புக்கு 1,500 போலீஸார்: எஸ்.பி. தகவல்

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போது 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போது 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தேரோடும் வீதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆழித்தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தேர்ப் பாதுகாப்புப் பணியில் 1,000 காவலர்களும், கோயில் வளாகம் மற்றும் கமலாலயக் குளக்கரையில் 500 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்படுவர்.
குற்றச்செயல்களை தடுக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர தேரோடும் 4 வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும், மாடி வீடுகளில் நின்றபடி போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். தேரோட்டத்தின்போது திருவாரூர் நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com