தகுதியுள்ள உறுப்பினர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறலாம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களும் கடன் பெறலாம் என மண்டல இணைப்பதிவாளர் கோ. காந்திநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களும் கடன் பெறலாம் என மண்டல இணைப்பதிவாளர் கோ. காந்திநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள சங்க உறுப்பினர்களுக்கு நடப்பு சம்பா சாகுபடிக்கு பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன.
பயிர்க் கடன் கோரும் உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம். விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு கடன் சங்கம் தொடர்பாக புகார்கள் இருப்பின், தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
கட்டுப்பாட்டு அறை (திருவாரூர்) 04366 222383,  கட்டுப்பாட்டு அறை (மன்னார்குடி) 04367 252346, மண்டல இணைப் பதிவாளர் (திருவாரூர்)  73387 49200,  சரகத் துணைப் பதிவாளர்  (திருவாரூர்)  73387 49202, சரகத் துணைப் பதிவாளர் (மன்னார்குடி)  73387 49203.
கள அலுவலர்கள்: கொரடாச்சேரி 73387 49218,  குடவாசல் 73387 49217,  திருவாரூர் 73387 49215, வலங்கைமான் 73387 49219,  நன்னிலம் 73387 49216,  முத்துப்பேட்டை 73387 49224,  நீடாமங்கலம் 73387 49220,  மன்னார்குடி 73387 49221,  திருத்துறைப்பூண்டி 73387 49223, கோட்டூர் 73387 49222.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com