கூத்தாநல்லூர்: திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

கூத்தாநல்லூரில் திமுக  புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூரில் திமுக  புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் நகர  திமுக  சார்பில்,  அ னைத்து  வார்டுகளிலும் கட்சிக்கு  புதிய  உறுப்பினர்கள்  சேர்க் கை  மற்றும் பழைய  உறுப்பினர்கள் புதுப்பித்தல் முகாம்  நடைபெற்றது. பின்னர் நகர திமுக  அலுவலகத்தில்,  புதிய உறுப்பினர்களின் படிவங்களை, நகரச் செயலாளர் எஸ்.எம். காதர்உசேனிடம்  கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
 நிகழ்ச்சியில், அவைத்  தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி, மாவட்டப் பிரதிநிதி  ஜெ.குமரேசன், பொருளாளர் ஏ.ஏ. அமீர்தீன், துணைச்  செயலாளர் சச்சி ஆனந்தன், மாவட்ட மாணவரணி  துணை அமைப்பாளர்  எஸ்.வி.பி. செந்தில் ஆனந்த்,  நகர  இளைஞரணி அமைப்பாளர் எம்.எம். ரசீன் பைசல், நகர  விவசாய  அணி  அமைப்பாளர்  கண்ணன்  உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com