மன்னார்குடி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

முன்னாள் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் 129-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னார்குடி பகுதி பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் 129-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னார்குடி பகுதி பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி எஸ். சண்முகராஜன் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கல்வி ஆலோசகர் இ.வி. பாண்டியன் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து, மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் நடத்திய மருத்துவ முகாம், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் என். சாந்தகுமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ப. ரமேஷ் முகாமை தொடங்கி வைத்தார்.
மன்னார்குடி அரசு மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் என். விஜயகுமார்  கலந்துகொண்டு, மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர்களுக்கு சிகிச்சை அளித்துடன், தோல் நோய் வருவதற்கான காரணத்தையும், அதை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் பற்றி விளக்கம்அளித்தார். நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி ஆர். அனிதா, கல்வி ஆலோசகர் வி. சாந்தி, மிட்டவுன் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கைலாசம், மனோகரன் ஆகியோர் பேசினர். விழாவில் பள்ளி முதல்வர் யு. தமிழ்ச்செல்வம், ரோட்டரி முன்னாள் நிர்வாகிகள் நடராஜன், மருத்துவர் வி. பாலகிருஷ்ணன், ஆசிரியர் ரா. நிதியரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com