குடிநீர்த் தேக்கத் தொட்டிகளில் குளோரினேசன் அவசியம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர்த் தொட்டிகளில் குளோரினேசன் அவசியம் செய்து

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர்த் தொட்டிகளில் குளோரினேசன் அவசியம் செய்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான  ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்னீரில் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதைத் தடுக்க நன்னீர் வைத்திருக்கும் அனைத்து பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும்.
காய்ச்சல் யாருக்கேனும் வந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரினேசன் அவசியம் செய்ய வேண்டும். குளோரினேசன் செய்த தண்ணீரில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகாது என்பதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் நிர்மல்ராஜ்.
கூட்டத்தில் கோட்டாட்சியர்கள் இரா. முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com